ஒப்புரவு

பாவசங்கீர்த்தனம் என்னும் இந்த ஒப்புரவு அருட்சாதனத்தை பல கத்தோலிக்கர்கள் ஒரு பொக்கிஷமாகக் கருதுகின்றனர்.
நமது ஆலயத்தில் நடைபெறும் அனைத்துத் திருப்பலிக்கு 15 நிமிடங்களுக்கு முன் ஒப்புரவு அருட்சாதனம் அளிக்கப்படுகிறது.
அவசரத் தேவைக்கு தயவு செய்து எங்கள் பங்கு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.


ஒப்புரவு அருட்சாதனம்

  • இந்த ஒப்புரவு அருட்சாதனத்தால் நமக்கும் நம் ஆன்மாவிற்கும் கிடைக்கும் நிம்மதிக்கும், மன அமைதிக்கும் ஈடிணையில்லை.
  • உறுதியற்ற நிலையிலிருந்த நாம், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நாம் கடவுளுடன் சரிசமமானவர்களாக, உறுதியான நம்பிக்கையில் இருக்கிறோம் என்ற அமைதியை இது அளிக்கிறது.
  • கத்தோலிக்க திருச்சபையைத் தழுவிய பலர் ஆரம்பத்தில் சற்று பயந்தாலும், இவ்வருட்சாதனத்தால் கிடைக்கும் உண்மையான பலனை நேசிக்க ஆரம்பித்தனர்.
  • பொதுவாக “பாவசங்கீர்தனம்” என்றும் “ஒப்புரவு” என்றும் அழைக்கப்படும் இவ்வருட்சாதனத்திற்குத் “தவம்” என்னும் சொல் சிறந்தது. ஏனெனில் இதற்குத் தேவையான அத்தியாவசியமான நம் மனதின் உள்நிலைப்பாட்டை இது விவரிக்கிறது.
  • உண்மையில், தவம் ஒரு நல்லொழுக்கம். இது விசுவாசத்தால் அறியப்பட்ட ஒரு நோக்கத்திலிருந்து நம்முடைய பாவங்களை வெறுக்கத் தூண்டி, கடவுளுக்கு விரோதமாக இனிமேல் இப்படிப்பட்டப் பாவங்களைச் செய்வதில்லை என்ற உறுதியுடன் நம்மைத் திருப்தியுடன் மனநிம்மதியுடன் நடக்கச் செய்கிறது.
  • இந்த ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக, திருமுழுக்கிற்குப் பின் நாம் செய்யும் அனைத்துப் பாவங்களுக்காக நாம் மனம் வருந்தி, மன்னிப்பு கேட்டு, அதைக் கடவுளின் பிரதிநிதியாகிய குருவானவரிடம் அறிக்கையிடும் போது, அவற்றை அவர் மன்னிக்கிறார்.
  • இயேசு, தனது சிலுவை மரணத்தால் நம் பாவத்திலிருந்தும், பாவத்தின் விளைவுகளிலிருந்தும், குறிப்பாகப பாவத்தால் கிடைக்கும் நித்திய மரணத்திலிருந்தும் நம்மை மீட்டார்.
  • ஆகையால், அவர் இறந்தோரிலிருந்து உயிர்த்த நாளிலே, மனிதர்களுடையப் பாவங்களை மன்னிக்கும் இந்த அருட்சாதனத்தை நிறுவினார்.