திருமணம்

திருமணத் தயாரிப்புக் கருத்தரங்கு

உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பருக்கோ விரைவில் திருமணமா?
தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவின் மற்ற இடங்களில் நடைபெறுகிறதா?
வேலைக்காக வெளிநாடுகளில் வாழும் கத்தோலிக்கர் அனைவரும், திருமணத்திற்காகத் தங்கள் பங்குகளில் ஓலை எழுதும் முன்னர் முறைப்படிக் கத்தோலிக்கத் திருமணத் தயாரிப்புக் கருத்தரங்கில் பங்கேற்று, அதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். சிங்கப்பூரில் வேலை செய்யும் தமிழ் பேசும் கத்தோலிக்கர்களுக்காகத் தமிழில் திருமணத் தயாரிப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்றுப் பயன் அடையுங்கள்.
நாள் : 25-ஏப்ரல்-2021 (ஞாயிறு)
நேரம் : காலை 9 முதல் மாலை 6 வரை
பதிவு : கீழுள்ளப் பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள்
இடம் : நிகழ்நிலை இணைய வழி வகுப்பு (ONLINE)
கட்டணம் :  S$30 மட்டுமே
கருத்தரங்கு முடிந்து ஒரு வாரத்தில் உங்களுக்கு பங்கேற்ப்புச் சான்றிதழும், திருமணத் தயாரிப்புக் கையேடும், சின்னக் குறிப்பிடமும் வழங்கப்படும். கீழுள்ளப் பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள்.
மேலும் விபரங்களுக்கு திரு. ரெக்ஸ் (9822-6171) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

திருமணத் தயாரிப்புக் கருத்தரங்குப் பதிவுப் படிவம்

நிகழ்ச்சி நிரல்
9:00 – 9:30 : பங்கேற்போர் பதிவு
9:30 – 11:00 : கத்தோலிக்கத் திருமணம் – ஒரு கண்ணோட்டம்
தன்னை அறிதல் – ஒரு சுயப் பரிசோதனை
11:00 – 12:30 : கத்தோலிக்கத் திருமணம் – ஒரு அருள் அடையாளம்
திருமணம் சார்ந்த முக்கியத் திரு அவைச் சட்டங்கள்
12:30 – 2:00 : மதிய உணவு இடைவேளை
2:00 – 3:30 : குடும்பமும் பிரச்சனைகளும்
3:30 – 5:00 : திருமணமும் பாலியலும்