புது நன்மை

இரு மொழி மறைக்கல்வி வகுப்புகள்

நமது ஆலயத்தில் நமது இந்திய மாணவர்களுக்காக இரு மொழி (தமிழ்/ஆங்கிலம்) மறைக்கல்வி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் சுமார் 45 நிமிடங்களுக்கு வகுப்புகள் ZOOM செயலி வழியாக நடைபெற்று வருகிறது. நம் பிள்ளைகளுக்குப் புரியும் வண்ணம் தினசரிச் செபங்களும், திருப்பலிச் செபங்களும், நமது கத்தோலிக்கத் திருமறைப் பாடங்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கிச் சொல்லித்தரப்பட்டு, புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் பெற அவர்கள் தயார் செய்யப்படுவர். எங்களது இப்புதிய முயற்சிக்கு ஆதரவளித்து, உங்கள் பிள்ளைகளை இந்த மறைக்கல்வி வகுப்புகளில் பங்கேற்கச் செய்து பயன் பெறுங்கள். நன்றி.

திவ்விய நற்கருணை (புதுநன்மை) வழங்கும் விழா
டிசம்பர் மாதம் 2022
பதிவு செய்ய இறுதி நாள்: 30-செப்டம்பர்-2022

வருகின்ற டிசம்பர் மாதம் 2022 நடைபெறும் புதுநன்மை விழாவுக்கு தங்களது பிள்ளைகளை இன்னும் பதிவு செய்யாதவர்கள், உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மறைக்கல்வி வகுப்புகள் பற்றி மேலும் விபரங்கள் தேவைப்பட்டால், அருட்தந்தை லியோ ஜஸ்டின் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தன்னார்வ மறைக்கல்வி ஆசிரியைகள் தேவை

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர்களிடம் அதிக அக்கறையுடன் மறைக்கல்விப் பணியாற்ற ஆர்வம் கொண்ட பெண்கள் அருட்தந்தை லியோ ஜஸ்டின் அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி பணிவன்புடன் வேண்டுகிறோம். நன்றி.