நோயில் பூசுதல்

நோயுற்றோ அல்லது இறக்கும் தருவாயில் உள்ள நம் கத்தோலிக்கர்கள் நோயில் பூசுதல் என்னும் அருள் அடையாளத்தாலும் திவ்விய நற்கருணையினாலும் ஆறுதலும் பலமும் பெறுகின்றனர். இது பற்றி மேலும் தகவல் பெறவோ அல்லது ஒரு அருட்பணியாளரை ஏற்பாடு செய்யவோ விரும்பினால், எங்கள் பங்கு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும். நன்றி.

நோயில் பூசுதல்

 • இந்த நோயில் பூசுதல் என்னும் அருள் அடையாளம், இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, நோயாளிகள் குணமடையவும், நல்ல உடற்சுகம் பெற்று வீடு திரும்பவும் இதைப் பயன்படுத்தலாம்.
 • நோய்களாலும், வயதாலும் மற்ற மருத்துவக் காரணங்களாலும் ஆபத்தை எதிர்கொள்ளும் அனைத்து விசுவாசிகளுக்கும் இதை அளிக்கலாம்.
 • நோயாளிகள் மறுபடியும் கடுமையான வியாதிக்குள்ளானால் அல்லது நெருக்கடிக்குள்ளானால் இதை மீண்டும் அளிக்கலாம்.
 • நோயுற்றோர் ஒரு ஆபத்தான அறுவை சிகிச்சைக்குச் செல்லும் முன்னரும் நோயில் பூசுதல் அளிப்பது நல்லது.
 • இது பற்றி மேலும் தகவல் பெறவோ அல்லது ஒரு அருட்பணியாளரை ஏற்பாடு செய்யவோ விரும்பினால், எங்கள் பங்கு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
 • மிக அவசரத் தேவையானால், திருப்பலிக்குப் பின் எந்தவொரு அருட்பணியாளரையும் சந்தித்துப் பேசுங்கள்.

நோயுற்றோருக்கும் இல்லத்தில் இருப்போருக்கும் நற்கருணை

 • இல்லத்திலும் மருத்துவமனையிலும் இருக்கும் நோயுற்றோருக்கும் முதியோருக்கும் திவ்விய நற்கருணை அளிப்பது மிகச் சிறந்தது.
 • நமது பங்கின் மேய்ப்புப் பணியின் ஒரு பகுதியாக, குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், அருட்பணியாளர் அல்லது நற்கருணை வழங்கும் பணியாளர் இவர்களுக்கு திவ்விய நற்கருணை எடுத்துச் செல்வது வழக்கம்.
 • ஆலயத்தில் திருப்பலிக் கொண்டாட்டத்திற்குப் பின் இல்லத்திற்கோ மருத்துவமனைக்கோ திவ்விய நற்கருணை எடுத்துச் செல்வர்.
 • நீங்கள் இவர்களின் உறவினராகவோ நண்பர்களாகவோ இருந்தால், எங்கள் பங்கு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவும்.
 • நோயில் பூசுதல் அளிக்க விரும்பினால், ஒரு அருட்பணியாளரை ஏற்பாடு செய்ய, எங்கள் பங்கு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

நமது பங்கின் பாராமரிப்பின் கீழ் வரும் மருத்துவமனைகள்

கே கே பெண்கள் மற்றும் சிறுவர்கள் மருத்துவமனை
ஃபேரெர் பார்க் மருத்துவமனை
ராஃபிள்ஸ் மருத்துவமனை