விருந்தோம்பல் பணி


எங்கள் பணி:

வழிபாடு தொடங்கும் முன்னரே எங்கள் பணி தொடங்குகிறது. திருப்பலி தொடங்கும் முன், குறைந்தது இருபது நிமிடங்களுக்கு முன்னரே ஆலயத்திற்கு வந்து, ஆலயத்தின் தூய்மை நிலையை சற்று கண்ணோட்டமிட வேண்டும். ஆனால், நமது முதல் கடமை, ஆலயத்திற்கு வரும் இறைமக்களை மனமகிழ்ச்சியுடன் நுழைவாயிலில் சந்தித்துச் சரியான இடங்களுக்கு அவர்களை இட்டுச் சென்று அமர வைக்க வேண்டும். பின்னர் திருப்பலியின் போது, காணிக்கை எடுப்பது, கைப்பிரதிகளை வழங்குவது, இறைமக்களின் முறையான நடத்தையைக் கண்காணிப்பது, இறை வழிபாட்டுக்குத் தகுந்தச் சூழலைப் பராமரிப்பது போன்றவை எங்களது சில பணிகள்.

எங்கள் நோக்கம்:

  • ஆலயத்திற்கு வரும் இறைமக்களுக்கு அன்புடனும், நட்புடனும், அக்கறையுடனும், பயனுள்ள வகையில் பணியாற்றுவது
  • இறை வழிபாட்டு அனுபவத்தை அதிகரிக்கச் செய்வது
  • பங்கு மக்களை ஆலயத்திற்குள் வரவேற்று, அவர்களைத் திருப்பலி தொடங்கும் முன் தகுந்த இடத்தில் அமர வைப்பது
  • காணிக்கை பவனிக்குத் தேவையானவர்களைத் தெரிந்தெடுத்து, காணிக்கைப் பொருட்களைத் தகுந்த நேரத்தில் எடுத்துச் செல்ல உதவுவது
  • திருவிருந்துப் பவனியில் பங்கேற்பவர்களை ஒழுங்கான முறையில் வழி நடத்துவது
  • நோயுற்றோரும், முதியோரும், இயலாதோரும் திவ்விய நற்கருணை பெற உதவுவது
  • திருப்பலியின் இறுதியில் வாரக் கைப்பிரதிகளை இறை மக்களுக்கு வழங்குவது
  • ஆலய வளாகத்தில் வாகனப் போக்குவரத்தையும் நிறுத்தத்தையும் கட்டுப்படுத்துவது
  • திருப்பலிக்குப் பின் மக்கள் விட்டுச் சென்றப் பிரதிகளை அகற்றி அமரும் இடத்தைச் சுத்தப் படுத்துவது
  • ஆலயத்திற்கு வரும் இறைமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது

எங்களுடன் பணியாற்ற விருப்பமா?

நாங்கள் இன்னும் அதிகமான இறைமக்களுக்குப் பணியாற்ற அதிக உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ள விரும்புகிறோம். எங்களோடு இணைந்து பணியாற்ற உங்களுக்கு விருப்பமிருந்தால், கீழுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, எங்களிடமோ அல்லது பங்கு அலுவலகத்திலோ கொடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். ஆர்வமுள்ள, துடிப்புடன் செயலாற்றக் கூடிய இளைஞர்களை எங்களோடு இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.


குழு உறுப்பினர்கள்

தலைவர்:  ரெஜினா கெளர்
உப தலைவர்:  கேத்ரீன் மகிள்
:  அந்தோணி குழந்தைசாமி
செயலாளர்:  மலர் குலசேகரம்
உதவிச் செயலாளர்:  தெரேசா பிள்ளை
பொருளாளர்:  பெக்கி கோமேஸ்
உதவிப் பொருளாளர்:  பெஞ்சமின்

Downloadable Forms
Application Form for Ministry of Hospitality