மறைக்கல்விப் பணி

இரு மொழி மறைக்கல்வி வகுப்புகள் 2018

நமது ஆலயத்தில் இரு மொழி (தமிழ்/ஆங்கிலம்) மறைக்கல்வி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஞாயிறும் காலை 9:30 மணித் தமிழ் திருப்பலி முடிந்தவுடன் சுமார் 45 நிமிடங்களுக்கு வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நம் பிள்ளைகளுக்குப் புரியும் வண்ணம் தினசரிச் செபங்களும், திருப்பலிச் செபங்களும், நமது கத்தோலிக்கத் திருமறைப் பாடங்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கிச் சொல்லித்தரப்பட்டு, புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் பெற அவர்கள் தயார் செய்யப்படுவர். எங்களது இப்புதிய முயற்சிக்கு ஆதரவளித்து, தங்கள் பிள்ளைகளை மறைக்கல்வி வகுப்புகளுக்கு அனுப்பி வைத்த இந்தியத் தமிழ் கத்தோலிக்கப் பெற்றொர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

இன்னும் உங்கள் பிள்ளைகளை பதிவு செய்யாதவர்கள், உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மறைக்கல்வி வகுப்புகள் பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால், அருட்திரு. நித்திய சகாயராஜ் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தன்னார்வ மறைக்கல்வி ஆசிரியைகள் தேவை

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர்களிடம் அதிக அக்கறையுடன் மறைக்கல்விப் பணியாற்ற ஆர்வம் கொண்ட பெண்கள் அருட்திரு. நித்திய சகாயராஜ் அவர்களைத் உடனே தொடர்பு கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.