வாசகர் பணிக்குழு

எங்கள் பணி:

நாங்கள் இந்த ஆலயத்தில் நடைபெறும் அனைத்துத் திருப்பலிகளிலும் இறைவார்த்தையை எடுத்துரைப்பதற்காக முறையாக நியமிக்கப்பட்டப் பங்கு உறுப்பினர்கள். இது திருஅவையின் மிக முக்கியமானப் பணிக்குழுக்களுள் ஒன்றாகும். திருப்பலி வாசகங்களை வாசிப்பதற்கு முன்னர் ஒவ்வொரு வாரமும் நாங்கள் எங்களை ஆன்மீக வழியில் தயார் செய்து கொள்கிறோம்.

எங்கள் நோக்கம்:

  • கத்தோலிக்கத் திருஅவையுடன் முழுமையாக ஒன்றித்திருத்தல்;
  • கத்தோலிக்க நம்பிக்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்தல்;
  • இறைவார்த்தை மீது ஆழமான விசுவாசமும் இறைப்பற்றும் கொண்டிருத்தல்;
  • முழு மனதோடு இந்தப் பணியை நிறைவேற்றுதல்;
  • பணிக்குழுவிலுள்ள அனைவரையும் அனுசரித்து ஆதரித்தல்;
  • நம்பிக்கையுடனும், சமநிலையுடனும், தெளிவான உச்சரிப்புடனும் இறைவார்த்தையை எடுத்துரைத்தல்;

எங்களுடன் பணியாற்ற விருப்பமா?

எங்கள் பணிக்குழு எப்போதும் புதிய உறுப்பினர்களை தேடுகின்றது. ஆன்மிகத்தையும் இறைவார்த்தையையும் நேசித்து, தினசரி விவிலியத்தை வாசிக்கும் நபர்களை நாங்கள் தேடுகிறோம். நீங்கள் 10 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், தமிழில் சரளமாகவும் தெளிவாகவும் வாசிப்பவர்களாகவும், நல்ல குரல் வளம் உடையவர்களாகமும், இறைவார்த்தையை எடுத்துரைக்க ஆர்வமும் துடிப்பும் உள்ளவர்களாகவும் இருந்தால், எங்களோடு இணைந்து பணியாற்ற உங்களை அன்புடன் அழைக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் அருட்தந்தை லியோ ஜஸ்டின் அவர்களிடம் உங்கள் பெயர்களை ஜனவரி 31ம் தேதிக்குள் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.