நற்கருணைப் பணிக்குழு

எங்கள் பணி:

திவ்விய நற்கருணை வழங்கும் பணியாளர்கள் அனைவரும் பங்குத் தந்தையால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுகிறார்கள். திருப்பலியின் போது பொது மக்களுக்கு நற்கருணை வழங்குவதும், இல்லங்களிலும், மருத்துவமனைகளிலும், நோயினால் அவதியுறும் மக்களுக்கு நற்கருணை வழங்குவதும் இவர்களது முக்கியப் பணி.

எங்கள் நோக்கம்:

கத்தோலிக்க விசுவாசத்தை வளர்த்துக் கொள்வதும், திவ்விய நற்கருணையில் உள்ள கிறிஸ்துவின் உண்மையானப் பிரசன்னத்தை ஆழ்ந்த பயபக்தியுடன் கண்டுகொள்வதும், கிறிஸ்துவின் அன்பின் சாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இவர்களது முக்கியப் நோக்கம்.

யார் இந்த நற்கருணைப் பணியாளர்கள்?

திவ்விய நற்கருணை வழங்கும் பணியாளர்கள் அனைவரும்:
– பங்கு ஆலயத்தில் நன்மதிப்பு பெற்ற ஒரு சிறந்தக் கத்தோலிக்கர்;
– கத்தோலிக்க விசுவாசத்தில் முதிர்ச்சியடைந்தவர் மற்றும் ஆழ்ந்த பயபக்தி கொண்டவர்;
– திவ்விய நற்கருணை மீது மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டவர்;
– தினசரி செப வழிபாட்டுகளில், குறிப்பாக ஞாயிறு திருப்பலிகளில் நற்கருணை மூலம் ஆன்மீக ரீதியில் வளர்ந்து வருபவர்;
– மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிகப் பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் ஏற்றுக்கொள்பவர்.
இவர்கள் தங்களது பங்கு ஆலயத்தில் உள்ள நோயாளிகளையும், முதியவர்களையும்,  இல்லங்களிலும், மருத்துவமனைகளிலும் முடங்கிக்கிடப்போரையும் தவறாமல் சந்தித்து, இறைவார்த்தையால் ஆறுதல்படுத்தி, நற்கருணை வழங்கி, அவர்கள் கடவுளைக் காண வழிசெய்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களது கத்தோலிக்க விசுவாசத்தை முழுமையாக்கவும்,  இறைவார்த்தையில் மேன்மையடையவும், ஆன்மீக வாழ்வை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் நடைபெறும் தியானத்தில் கலந்துகொள்கிறார்கள். தங்களோடு பணியாற்றும் சகப் பணியாளர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆலயக் கடமைகளைச் செய்ய அழைக்கப்பட்ட இவர்களைத் தயாரிக்க சில அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.