சட்ட உதவிப் பணிக்குழு


Pro Bono | Legal Clinics | Mediation

எங்கள் பணி:

கத்தோலிக்க வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் இந்த இலவச சட்ட ஆலோசனை மற்றும் சமரசப்படுத்தும் சேவை, எந்த மதத்தினரையோ நாட்டினரையோப் பொருட்படுத்தாமல், ஏழை எளியவர்களுக்கும் பின்தங்கியவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

எங்கள் நோக்கம்:

கீழே கொடுக்கப்பட்டவைகளுக்கு நாங்கள் ஆலோசனை வழங்கத் தயாராக இருக்கிறோம்;
 • குடும்பப் பிரச்சனைகள்,
 • சொத்துப் பிரச்சனைகள்,
 • வேலைவாய்ப்புப் பிரச்சனைகள்,
 • தனிப்பட்ட விபத்து / காயம்,
 • குத்தகைப் பிரச்சனைகள்,
 • பணப் பட்டுவாடா,
 • வாகன / தொழில்துறை விபத்துகள்.

யார் தகுதியானவர்:

 • நீங்கள் ஒரு தனிப்பட்டப் பிரச்சனை குறித்தச் சட்டச் சிக்கலை எதிர்கொண்டிருக்க வேண்டும்*.
 • இதற்கு முன்பு எவ்விதச் சட்ட ஆலோசனையும் பெற்றிருத்தல் கூடாது.
 • மேலும் ஒரு வழக்கறிஞருக்குப் பணம் செலுத்த வசதி இல்லாதிருக்க வேண்டும்.
 • * வணிகம்/தொழில்முறை பிரச்சனைகள் சார்ந்தச் சட்டச் சிக்கல்களுக்கு ஆலோசனை நாங்கள் வழங்க மாட்டோம்.

நீங்கள் செய்ய வேண்டியது:

 1. நீங்கள் எங்களுடன் ஒரு நேர்காணலுக்கு, இணையம் அல்லது மின்னஞ்சல் வழியாகப் பதிவு செய்ய வேண்டும்.
  மின்னஞ்சல் முகவரி: admin@clgsingapore.com
  நேர்காணலுக்குப் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
 2. எங்கள் வழக்கறிஞர்கள் உங்களுக்கு சிறப்பாக உதவ, தயவு செய்து உங்கள் சட்டப் பிரச்சனைகள் குறித்த அனைத்துத் தகவல்களையும், பின்னணியையும், ஆவணங்களையும் எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
 3. உங்கள் வழக்கு தொடர்பாக எங்களதுத் தன்னார்வ வழக்கறிஞர்களில் ஒருவர் உங்களுக்கு ஒதுக்கப்படுவார். அவர் உங்களை நேரடியாகச் சந்திக்க உங்களைத் தொடர்பு கொள்வார்.
 4. தற்போதைய கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, நீங்கள் பதிவு செய்தவுடன், இந்த வழக்குத் தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் முதலில் தொலைபேசி வழியாக வழங்கப்படும்.