இசை/பாடகர் பணிக்குழு

திருவழிபாட்டு இசைக்குழு அல்லது பாடகர் குழு, திருச்சபையின் வாழ்வுக்கும், அனைத்து நற்கருணை கொண்டாட்டங்களுக்கும், மற்ற வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் பங்களிக்கிறது. இந்தப் பணிக்குழு திருவழிபாட்டின் போது பாடல்கள் பாடவும், அருள்பணியாளரின் செபத்திற்கு பதிலளிக்கவும், இசைக் கருவிகள் இசைக்கவும், திருப்பாடல்கள் ஓதவும், நிகழ்ச்சிகளை வழிநடத்தவும் பொறுப்பான பாடகர்களையும் இசைக்கலைஞர்களையும் உள்ளடக்கியது. தற்போது எங்கள் பாடகர் குழுவினரின் எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருப்பதால், நற்கருணைக் கொண்டாட்டத்தின் போது இசைக் கருவிகள் இசைத்துத் துதிக்கவும் வழிபடவும், திருப்பலியைச் சரியாக வழிநடத்தவும் எங்களுக்கு ஆட்கள் தேவை. இசைக்கருவிகளை வாசிக்கக் கூடியவர்கள், இனிமையான குரல் வளம் உள்ளவர்கள், இந்தப் பணிக்குழுவுக்குத் தங்கள் திறமைகளை பங்களிக்க விருப்பமுள்ளவர்கள் அருட்தந்தை லியோ ஜஸ்டின் அவர்களிடம் உங்கள் பெயர்களைக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.