பலிப்பீடச் சேவைப் பணிக்குழு

திருப்பலிப் பீடத்தில் திருப்பலிகளிலும் மற்ற திருவழிபாடுகளிலும் அருள்பணியாளருக்கு உதவுவதன் வழியாக நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பணியாற்றுவதே எங்கள் நோக்கம். அருள்பணியாளருக்கு அடுத்தப்படியாக இவர்கள் மட்டுமே பலிப்பீடத்தில் நுழையத் தகுதி பெற்று, ஒரு சிறந்தப் பணியை இவர்கள் செய்கிறார்கள். திருப்பலியில் பங்கேற்போர் அனைவரும் நல்ல முறையில் பக்தியோடு ஈடுபட அருள்பணியாளருக்கு உதவுவதில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களின் பணி, திருவழிபாட்டு வழிமுறைகள் சரியாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், தங்களது பணியால் மற்றவர்கள் கிறிஸ்துவைச் சந்திக்க உதவுகிறார்கள். பலிப்பீடப் பணியாளர்கள் மிகுந்த பக்தியுடன் செயல்பட்டு, தங்கள் அன்றாட வாழ்வில் மற்றவர்களுக்கு கிறிஸ்துவாக இருக்கவும் செயல்படுகிறார்கள். எங்களோடு இணைத்துப் பணியாற்றத் தீவிர ஆசையும் ஆர்வமும் உள்ள 9 வயதுக்கு மேற்பட்ட கத்தோலிக்கச் சிறுவர்கள், அருட்தந்தை லியோ ஜஸ்டின் அவர்களிடம் உங்கள் பெயர்களைக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.