தனிப்பட்ட ஆராதனைக்குப் பதிவு

பதிவுச் செயல்முறை

முதலில் நீங்கள், myCatholic.sg என்ற இணையப் பக்கத்தில் உங்களது தனிப்பட்ட விபரங்களுடன் (அடையாள அட்டை எண் அல்லது வேலை அனுமதி அட்டை எண், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) பதிவு செய்து, தூய லூர்து அன்னை ஆலயத்தை உங்கள் பங்கு ஆலயமாகத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆலயத்திற்கு வரும் போதும், பதிவு செய்த விபரங்களை ஆலய ஊழியர்களிடம்/தொண்டர்களிடம் காட்ட வேண்டும். தயவு செய்து அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி, அவர்களோடு ஒத்துழைக்கவும்.

தனிப்பட்ட ஆராதனை வார நாள்களில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

நீங்கள் செய்ய வேண்டியவை:
 • உங்கள் கைப்பேசிகளில் QR குறியீடு வருடியைப் (ஸ்கேனர்) பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். SafeEntry செய்ய உங்களுக்கு இது தேவைப்படும்,
 • உங்கள் கைப்பேசிகளில் இணைய இணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும்,
 • எந்நேரமும் உங்கள் முகக் கவசத்தைச் சரியாக அணிந்து கொள்ளுங்கள்,
 • உங்கள் அடையாளத்தை சரிபார்க்க உங்களது அடையாள அட்டை அல்லது வேலை அனுமதி அட்டை(EP/DP/SP/WP) உங்களிடம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்,
 • ஒவ்வொரு முறை வரும்போதும் உங்களது வெப்பநிலை சோதிக்கப்பட வேண்டும்,
 • உங்களுக்குச் சளிக் காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், நீங்கள் ஆலய வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.
பாதுகாப்பு நடைமுறைகள்:
 • நமது ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஐந்து குடும்பங்கள் மட்டுமே தனிப்பட்ட ஆராதனை செய்ய அனுமதி அளிக்கப்படும். குடும்பங்களுக்கு இடையே சரியானப் பாதுகாப்பு இடைவெளி இருக்க வேண்டும்.
 • ஒவ்வொரு குடும்பத்திலிருந்து அதிகபட்சம் ஐந்து பேர் மட்டுமே ஒன்றாக செபிக்க அனுமதி அளிக்கப்படும்.
 • வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த வழிபாட்டாளர்களிடையே எவ்வித உடல் ரீதியான தொடர்பும் இருக்கக்கூடாது.
 • பதிவு செய்வதற்கான இணைப்பு: https://calendly.com/ololsec/private-worship-at-church-of-our-lady-of-lourdes
 • உங்கள் வருகைக்கான தேதியையும் நேரத்தையும் தேர்ந்தெடுங்கள்.
 • பதிவுச் செயல்முறையில் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தயவு செய்து எங்கள் ஊழியர்களை/தொண்டர்களை அணுகவும்.
அனைத்து வழிபாட்டாளர்களுக்கும் நமது ஆலயத்தைப் பாதுகாப்பான இடமாக வைத்துக் கொள்வோம். உங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி.
இறை ஆசீர்.
பங்குத்தந்தை
அருள்திரு மைக்கேல் சீத்தாராம்