திருப்பலியில் பங்கேற்கப் பதிவு

பதிவுச் செயல்முறை

முதலில் நீங்கள், myCatholic.sg என்ற இணையப் பக்கத்தில் உங்களது தனிப்பட்ட விபரங்களுடன் (அடையாள அட்டை எண் அல்லது வேலை அனுமதி அட்டை எண், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) பதிவு செய்து, தூய லூர்து அன்னை ஆலயத்தை உங்கள் பங்கு ஆலயமாகத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆலயத்திற்கு வரும் போதும், பதிவு செய்த விபரங்களை ஆலய ஊழியர்களிடம்/தொண்டர்களிடம் காட்ட வேண்டும். தயவு செய்து அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி, அவர்களோடு ஒத்துழைக்கவும்.

வார நாள்களில் திருப்பலி நேரங்கள்:
    மதியம் 12:30 மணி (ஆங்கிலம்) & இரவு 7:00 மணி (தமிழ்)


வார இறுதி நாள்களில் திருப்பலி நேரங்கள்:
    சனி: மாலை 5:00 மணி, 6:00 மணி & இரவு 7:30 மணி
    ஞாயிறு: காலை 8:00 மணி, 9:30 மணி (தமிழ்), 11:00 மணி, மதியம் 12:30 மணி & மாலை 6:30 மணி (தமிழ்)

    (குறிப்பிடப்பட்டதைத் தவிர அனைத்துத் திருப்பலிகளும் ஆங்கிலத்தில் நடைபெறும்)

நீங்கள் செய்ய வேண்டியவை:
  • உங்கள் கைப்பேசிகளில் QR குறியீடு வருடியைப் (ஸ்கேனர்) பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். SafeEntry செய்ய உங்களுக்கு இது தேவைப்படும்,
  • உங்கள் கைப்பேசிகளில் இணைய இணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும்,
  • எந்நேரமும் உங்கள் முகக் கவசத்தைச் சரியாக அணிந்து கொள்ளுங்கள்,
  • உங்கள் அடையாளத்தை சரிபார்க்க உங்களது அடையாள அட்டை அல்லது வேலை அனுமதி அட்டை(EP/DP/SP/WP) உங்களிடம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்,
  • ஒவ்வொரு முறை வரும்போதும் உங்களது வெப்பநிலை சோதிக்கப்பட வேண்டும்,
  • உங்களுக்குச் சளிக் காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், நீங்கள் ஆலய வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.
பாதுகாப்பு நடைமுறைகள்:
  • நமது ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் திருப்பலிக்கு, சரியானப் பாதுகாப்பு இடைவெளியுடன் அதிகபட்சம் ஐம்பது பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.
  • திருப்பலில் பங்கேற்க நீங்கள் கண்டிப்பாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • வழிபாட்டாளர்களிடையே எவ்வித உடல் ரீதியான தொடர்பும் இருக்கக்கூடாது.
  • ஒரு மாதத்தில் நீங்கள் இரண்டு வார இறுதித் திருப்பலிக்குப் பதிவு செய்யலாம்.
  • வார நாட்களில் நீங்கள் இரண்டு திருப்பலிக்குப் பதிவு செய்யலாம்.
  • திருப்பலிக்குப் பதிவு செய்வதற்கான இணைப்பு: myCatholic.sg/login
  • நீங்கள் பங்கேற்க விரும்பும் திருப்பலிக்கான தேதியையும் நேரத்தையும் சரியாகத் தேர்ந்தெடுங்கள்.
  • நீங்கள் பங்கேற்க விரும்பும் திருப்பலிக்கான நேரத்திற்கு குறைந்த பட்சம் 48 மணி நேரத்திற்கு முன்பே பதிவு செய்யப்பட வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்டத் திருப்பலிக்கு உங்களால் வர முடியவில்லை என்றால், தயவு செய்து 48 மணி நேரத்திற்கு முன் உங்கள் பதிவை ரத்து செய்யவும். இதனால், திருப்பலியில் பங்கேற்க மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்புக்கு கிடைக்கும்
  • ஆலய நுழைவுக்கான நடைமுறைகளை எங்கள் ஊழியர்கள்/தொண்டர்கள் முடிக்கும் வகையில் திருப்பலிக்குச் செவ்வனே வந்து விடுங்கள்.
  • பதிவுச் செயல்முறையில் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தயவு செய்து எங்கள் ஊழியர்களை/தொண்டர்களை அணுகவும்.
அனைத்து வழிபாட்டாளர்களுக்கும் நமது ஆலயத்தைப் பாதுகாப்பான இடமாக வைத்துக் கொள்வோம். உங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி.
இறை ஆசீர்.
பங்குத்தந்தை
அருள்திரு மைக்கேல் சீத்தாராம்